வீட்டில் 140 பவுன் நகை திருடு போனதே தெரியாமல் வாழ்ந்த குடும்பம்.. மயிலாப்பூரில் திடுக் சம்பவம்
அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்த தங்கதுரை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டதால் இவரும் இவரது மகனும் மட்டும் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், எதார்த்தமாக வீட்டில் இருந்த நகைகளை தங்கதுரை எடுத்து பார்த்துள்ளார். அப்போது 140 சவரன் நகை மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தங்கதுரை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவு தடயங்களை ஆய்வு செய்தனர். நகைகள் எப்போது திருடுபோனது? எப்படி திருடுபோனது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story