8 நாட்களாகியும் வடியாத வெள்ளம்... கருப்பு நிறத்தில் மாறிய மழைநீர்

x

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை நின்று 8 நாட்கள் ஆகியும் சென்னை கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகரில் இன்னும் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்... சாலையில் தேங்கியுள்ள மழை நீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், கொசு உற்பத்தி பெருகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்... பலருக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் கடும் சிரமத்துடன் சென்றனர்... தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து வெளியேற்றி வரும் நிலையிலும் தண்ணீர் குறையாமல் குளம் போல் வீதிகளில் தேங்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்