பாதியிலேயே நிறுத்தப்பட்ட கிராம சபை கூட்டம்- செங்கல்பட்டில் பரபரப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம், பொதுமக்கள் முறைகேடு புகார்கள் கூறியதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஊராட்சி செயலர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஆலப்பாக்கம் ஊராட்சியில் 500 வீடுகளுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஒரு வீடு மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக கூறி ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பின்னர், கூட்டத்தை கலைத்தனர். இதனால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்