செங்கல்பட்டில் தூர்வாருவது போல் கொள்ளை.. ஒன்றுகூடிய மக்கள் -நிறுத்தாவிட்டால் வெடிக்கும்.. எச்சரிக்கை
திருப்போரூர் அருகே ஆலத்தூரில் உள்ள ஏரி சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியை தூர்வாரும் போர்வையில் மணல் கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில், ஆலத்தூர் ஏரி அருகே பொக்லைன் இயந்திரத்துடன் மணல் அள்ளும் பணி நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஏராளமானோர் அங்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணல் கொள்ளையால் பாசனத்திற்கு நீர் கிடைக்காததோடு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவித்தனர். தூர்வாருகிறோம் எனக்கூறிவிட்டு 30 அடி பள்ளம் தோண்டி மணல் கொள்ளை நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
Next Story