மாலையில் மாறிய வானம்.. செங்கல்பட்டில் பிரிதெடுத்த கனமழை | Chengalpattu | Rain | Thanthitv
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, மகேந்திரா சிட்டி, பேரமனூர், மல்ரோசாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழ்ல் நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
Next Story