டேட்டிங் செயலி மூலம் சீட்டிங் செய்த பெண்... முதலில் ஆபாசம்...முடிவில் பண மோசடி.....

x

சென்னை - சவுகார்பேட்டை

ஆபாச சேட் 1000....வீடியோ கால் 30000...

தொழிலதிபர்களை குறிவைத்து 150 கோடி மோசடி...

டேட்டிங் செயலி மூலம் சீட்டிங் செய்த பெண்...

முதலில் ஆபாசம்...முடிவில் பண மோசடி.....

ஆயிரம் ரூபா காட்டுண போதும், நாங்க சொர்கத்தையே காட்டுறோம்னு சொல்லி 150 கோடிய சுருட்டி இருக்காங்க ஒரு மோசடி ராணி...டேட்டிங் ஆப்,ஆபாச சேட், வீடியோ கால், கிரிப்டோகரன்சினு தொழிலதிபர்கள மட்டுமே குறிவச்சி நடந்த இந்த தில்லாலங்கடி வேலையின் பின்னணி என்ன...?

ஆபாச சாட்டுக்கு ஆயிரம், நிர்வாண வீடியோ காலுக்கு 30 ஆயிரம் என டேட்டிங் ஆப்பில் தொழிலதிபர்களை மட்டும் குறிவைத்து 150 கோடியை சுருட்டிய கில்லாடி பெண் ரூபா ஷா இவர் தான்...


பெயரில் இருக்கும் ரூபாவுக்காக பல பலே வேலைகளை செய்து 100 பெரும் புள்ளிகளை தனது ஆசை வலையில் விழ வைத்த இந்த மோசடி ராணியின் சாயம் வெளுத்தது எப்படி என்று அறிந்து கொள்ள விசாரனையில் இறங்கினோம்.

சென்னை சவுக்கார்பேட்டையை சேர்ந்த 50 வயது நகைக்கடை உரிமையாளர் ஒருவர் டேட்டிங் ஆப்பில் 3 கோடியே 61 லட்சத்தை ஏமாந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் டேட்டிங் செயலி மூலமாக ரூபா ஷா என்ற பெண்ணோடு நடைக்கடை ஓனருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஆசையை தீர்த்துக்கொள்ள உள்ளே நுழைந்தவர் ரூபா ஷாவின் அழகில் மயங்கி மனதை பறிகொடுத்திருக்கிறார். அந்த பழக்கத்தில் நடைகடை ஓனரின் சொத்து மதிப்பு முதல் பேங்க் பேலன்ஸ் வரை அத்தனையும் ரூபா ஷாவுக்கு தெரிந்திருக்கிறது.

உடனே உங்களிடம் இருக்கும் பணத்தை கிரிப்டோகரண்சியில் முதலீடு செய்யுங்கள், நான் பல மடங்கு லாபத்தை ஈட்டி தருகிறேன் என கூறி இருக்கிறார்.

இதனை நம்பிய நகை கடை ஓனரும் சிறுக சிறுக 3 கோடியே 61 லட்சத்தை ரூபா ஷாவிடம் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் முதலீட்டுக்கான லாபத்தொகையாக சில லட்சங்களை கொடுத்திருக்கிறார் ரூபா ஷா.

ஆனால் அதன்பிறகு அவருக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்தவர் ரூபா ஷாவை பணம் கேட்டு நச்சரித்திருக்கிறார். உடனே சுதாரித்துக்கொண்ட ரூபா ஷா அன்று முதல், நகை கடை ஓனருடனான தொடர்பை முடித்துக்கொண்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த நகை கடை ஓனரோ, காவல் நிலையத்தில் புகாரி அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை தொடங்கி இருக்கிறார்கள்.

ரூபா ஷாவின் செல்போன் எண், பணம் அனுப்பிய ஆதாரங்கள், வங்கி பரிவர்த்தனை நடந்த ப்ரான்ச்,இமெயில் ஐடியின் ஐபி அட்ரஸ் என அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.

பத்து நாட்கள் நடந்த தொடர் தேடுதல் வேட்டையில் கொல்கத்தா பரா நகர் பகுதியைச் சேர்ந்த ரூபா ஷா, மேற்கு வங்கம் ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் சோனி, மேற்கு வங்கம் ஹூக்ளி பகுதி சேர்ந்த விஜய் சோனி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் இந்த கும்பல் டேட்டிங் செயலி மூலம் 100 தொழிலதிபர்களை குறிவைத்து 150 கோடி பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆம்.... 47 வயதான ரூபா ஷா ஒரு கணினி பட்டதாரி. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் லலித் சங்கனி என்ற முக்கிய புள்ளியின் கால் சென்டர் நிறுவனத்தில் மேளாலராக பணியாற்றி இருக்கிறார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவத்தை கொண்டு இரண்டு பெண் ஊழியர்களை வைத்து ஏபிஏ பியூச்சர் சொல்யூஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

இந்த நிறுவனத்தில் சேவைகள் அனைத்துமே அந்த மாதிரி வேலைகள் தான்...

ஆபாச சாட் செய்வதற்கு ரூ.1000, முகம் வரை வீடியோ கால் பேசுவதற்கு ரூ. 5 ஆயிரம், அரை நிர்வாணத்தில் பேசுவதற்கு ரூ. 15 ஆயிரம், முழு நிர்வாணமாக பேசுவதற்கு 30 ஆயிரம் என ஆஃபர்களை அள்ளி வீசி தொழிலை தொடங்கி உள்ளார்.

ஆளைகவரும் அழகு, வசீகர பேச்சு, நுனி நாக்கில் ஆங்கிலம் என வார்த்தையில் ஜாலம் காட்டி ஆண்களை மயக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் சாதாரன ஆடவர்களுக்கு வலைவீசியதில் பெரிய லாபம் பார்க்க முடியாமல் போயிருக்கிறது.

இதனால் தனது டார்கெட்டை பணம் படைத்த தொழிலதிபர்களை நோக்கி குறிவைத்துள்ளார் ரூபா ஷா. முதலில் காமத்திற்காக வரும் பிசினஸ் மேன்களை மயக்கி தனது ஆபாச வலையில் விழவைக்கும் ரூபா ஷா, அதன்பிறகு அவர்களின் பணத்தை கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்ய சொல்லி அன்புகட்டளை போட்டிருக்கிறார்.

சர்வமும் ரூபா ஷா தான் என அடிமையான தொழிலதிபர்களும், அவர் கேட்கும் பணத்தை அப்படியே முதலீடு செய்திருக்கிறார்கள்.

இப்படி பல கஸ்டமர்களும் கண்மூடித்தனமாக முதலீடு செய்து ஏமாந்து போக, கால் சென்டர் குடிசை தொழிலை பெரிய கார்ப்ரெட் நிறுவனமாக மாற்றி கோடிகணக்கில் லாபம் பார்த்திருக்கிறார் ரூபா ஷா.

அப்படி சிக்கியவர் தான் இந்த சவுக்கார்பேட்ட நடை கடை ஓனரும்.

உல்லாசம், பிசினஸ் டீல் என நகைக்கடை ஓனர் இதுவரை 1077 முறை ரூபா ஷாவிடம் நிர்வாண வீடியோ கால் பேசி கோடிகணக்கில் கோட்டை விட்டதும் தெரியவந்திருக்கிறது.

ரூபா ஷாவின் இந்த பலே திட்டங்களுக்கு பக்கபலமாக ரமேஷ் சோனியும், விஜய் சோனியும் இருந்து வந்திருக்கிறார்கள்.

இந்த தொழிலில் அப்பாவி பெண்களை ஈடுபட வைத்து பல ஆயிரங்களை ஊக்கத்தொகையாக கொடுத்து பிசினஸ் நடத்தி வந்ததும் விசாரனையில் வெளிவந்துள்ளது.

ரூபா ஷாவிடம் தொடர் விசாரனை நடத்தி வரும் போலீசார், இவற்றுக்கெல்லாம் முன்னோடியான லலித் சங்கேனியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்