JUSTIN || சஸ்பெண்ட் - மத்திய அரசு அதிரடி முடிவு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க ஒரு தற்காலிக குழுவை
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை நிர்வாகிக்க ஒரு தற்காலிக குழுவை உருவாக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்தியிலே விளையாட்டு அமைச்சகம் கடிதம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளிட்டார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்துமத்திய வியைாட்டுத்துறை அமைச்சகம்
நடவடிக்கையை எடுத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளைக் கண்காணிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் தற்காலிகக் குழுவை அமைக்க மத்திய விளையாட்ட அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்அந்த கடிதத்தைை அனுப்பி உள்ளார்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இரண்டாவது முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து
இந்திய ஒலிம்பிக் சங்கம் மீண்டும் மல்யுத்த கூட்டமைப்பு உள்ள விஷயங்களை மேற்பார்வையிட ஒரு தற்காலிக குழுவை அமைக்க உள்ளது.
48 மணி நேரத்தில் இந்த குழு அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
....