கல்வி நிலையங்களில் சாதி பெயர்கள்.. ஐகோர்ட்டில் மனு.. ஆரம்பித்த சிக்கல்?
தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதிய பெயர்களை நீக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கல்வி நிலையங்களின் பெயர்களுடன் சாதிப் பெயரை சூட்டியுள்ளது பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், சாதிய பெயர்களை அங்கீகரிப்பது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் உள்ள சாதிய பெயரை நீக்கக் கோரி அனுப்பிய கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
Next Story