சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

x

சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சிறுபான்மை அந்தஸ்து குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறி, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இடஒதுக்கீட்டு கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்