மின்சார கேங்மேன் தொழிலாளர்கள் 800 பேர் மீது வழக்குப்பதிவு

x

சென்னை கொளத்தூரில், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார கேங்மேன் தொழிலாளர்கள் 800 பேர் மீது போலீசார், 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 ஆயிரத்து 493 ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கக்கோரி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும் என்ற தகவல் காரணமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொளத்தூரில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்