அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு... நீதிபதி திடீர் மாற்றம் | Madras High Court

x

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவர். அதன்படி, மதுரையில் உள்ள நீதிபதிகள் சென்னைக்கு மாற்றப்பட்டு, அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களின் வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இனி எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான வழக்குகளை அவர் விசாரிக்கவுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்