மகனை பற்றி ஜார்க்கண்டில் இருந்து வந்த கால் அதிர்ந்து டெல்லிக்கு விரைந்த நாமக்கல் பெற்றோர்

x

ஜார்க்கண்டில் தமிழகத்தை சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்த அர்ஜுன் நகரை சேர்ந்த மதியழகன் - பூங்கொடி தம்பதியின் மகன் மதன்குமார். இளநிலை மருத்துவம் படித்த மதன்குமார், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். பெற்றோரிடம் சகஜமாகவே பேசி வந்துள்ளார். இந்நிலையில், தந்தை மதியழகனுக்கு வந்த அழைப்பில், மதன்குமார் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதன்குமாரின் குடும்பத்தினர், ஜார்க்கண்ட் செல்வதற்காக விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு அவர்கள் விமானம் மூலம் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்