"கொத்தடிமை போல் வேலை வாங்குகின்றனர்" - வேதனையில் தவிக்கும் பழங்குடியின மக்கள்
மீன்சுருட்டி புதுத் தெருவில் இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ், மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தம் செய்யும் பணி வழங்கப் பட்டுள்ளது. எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மருத்துவக் கழிவுகளை பழங்குடியின மக்களை அகற்றுமாறு பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ள நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. பழங்குடியினர் என்பதால் மருத்துவக் கழிவுகளை அகற்ற பணிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story