கூரையை பிய்த்து கொட்டிய மழை...சட்டென பயணிகள் எடுத்த முடிவு.. திகைத்து நின்ற கண்டக்டர்

x

மூணாறு- திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் குடை பிடித்தபடி பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது. தேனி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தநிலையில், திடீரென பெய்த மழைகாரணமாக பேருந்து முழுவதும் மழைநீர் ஒழுகியது. இதனால் பேருந்துக்குள் நனைந்தபடி பயணிகள் அமர்ந்திருந்தநிலையில், ஒருவர் குடைபிடித்தபடி பயணம் செய்தார். இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்