சண்டையால் பேசாமல் போன `Boybestie' ...கேலி கிண்டல் செய்த சக மாணவிகள்..மாணவி எடுத்த விபரீத முடிவு

x

கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது சக மாணவிகள் கிண்டல் செய்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியால்பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிஷா என்ற மாணவி, கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாத்தில் கலந்து கொண்டார். அப்போது அதே கல்லூரியில் படிக்கக்கூடிய ஆண் நண்பர், நிஷாவிடம் பேசாமல் சென்றுள்ளார். இதனை பார்த்த அவரது சக தோழிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த நிஷா கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்