கருகருவென ஓடும் ஆறு -கருப்பாக மாறிய நிலம்

x

கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் அதிகப்படியான கழிவுகளால், நீரானது கருநிறத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. தென்பெண்ணை ஆற்றுநீரை எதிர்ப்பார்த்து சூளகிரி தாலூகாவிற்குட்பட்ட பாத்தக்கோட்டா, ஆழியாளம், கனுஜூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தில் நெல், வாழை, புதினா ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கருநிறத்தில் வரும் நீரால், நிலம் கருப்பாக காட்சியளிப்பதுடன் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வீட்டு, தொழிற்சாலைகள் கழிவுகள் கலப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்