அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு..! நீதிமன்றம் பரபரப்பு தகவல் | Jallikattu 2024

x

இதுதொடர்பாக, மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி, அனைவரின் கருத்தை கேட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தவிர்த்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என சமாதானக் கூட்டத்தில் பெரும்பான்மையினர் தெரிவித்தனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் கொண்ட குழுவும், அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்