சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா.. முருகன் தங்க வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று முருகன் தங்க முத்துகிடா வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Next Story