அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம் - சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை..?

x

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ள இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு, சாஸ்திரி பவன் மெயின் கேட் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. எனினும், காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 5 பேர் சாஸ்திரி பவனிற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்