ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிறையில் துள்ளிய ரவுடி நாகேந்திரன்-அலப்பறையை பார்த்து போலீஸ் செய்த செயல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனை போலீசார் அண்மையில் கைது செய்தனர். விசாரணையில், நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வேலூர் மத்திய சிறையில் உள்ள நாகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் வாரண்ட் பெறப்பட்ட நிலையில், வேலூர் சிறை அதிகாரிகளிடம், சென்னை செம்பியம் தனிப்படை போலீசார் ஆவணங்களை சமர்ப்பித்தனர். பின்னர் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தை போலீசார் நாகேந்திரனிடம் வழங்க முயன்ற போது, கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் என்னை எதற்காக வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள் என ஆவணத்தை வாங்காமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் ஆவணத்தை நாகேந்திரன் உள்ள அறைக்கு முன்பாக போலீசார் சுவரில் ஒட்டி விட்டு சென்றதாக தெரிகிறது.