"முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்" - அண்ணாமலை பரபரப்பு அறிக்கை

x

"முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்" - அண்ணாமலை பரபரப்பு அறிக்கை

போதைப்பொருள் கடத்தல் கைதுகள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த அவப்பெயர்கள் என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனான ஜாஃபர் சாதிக், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படும் வரை, அதுகுறித்து திமுக அரசுக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும் விசிக நிர்வாகியான முஹம்மது சலீம், சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு மற்றும் அதன் மூலம் பணம் சம்பாதித்தற்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அண்மையில் திமுக நிர்வாகியான இப்ராஹிம் என்பவர் 70 கோடி மதிப்பிலான மெத்தாபெட்டமைன் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த கைதுகள் அனைத்தும் நற்சான்றுகள் அல்ல... அவப்பெயர்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்துக் கொள்ள வேண்டும் என் அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்