காலை உணவிற்கு பிறகு நடந்த மாற்றம்.. மருத்துவமனையில் 50+ மாணவர்கள்.. | Andhra | Thanthitv
திருப்பதியில் அரசு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாயுடுபேட்டையில் உள்ள அம்பேத்கர் குருகுல பாடசாலையில், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். வழக்கம்போல் அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களில் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 50 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story