மோதலாக மாறிய வாக்குவாதம்.. நண்பனையே வெட்டி கொன்ற இளைஞர்.. சென்னையை அதிர வைக்கும் சம்பவம்
சென்னை மணலியில் கஞ்சா போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். ஜோதீஸ்வரன் என்ற 22 வயது இளைஞர், தமது நண்பர்களை சந்திக்க திருவெற்றியூர் வந்துள்ளார். அப்போது கடலோரப் பகுதியில் அனைவரும் கஞ்சா புகைத்த படி, பேசி கொண்டிருந்த போது யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவதால் மோதலாக மாறிய நிலையில், சக நண்பர்கள் கத்தியை எடுத்து ஜோதீஸ்வரனை சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி அபினேஷ் மற்றும் சுனில் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story