நண்பர்களோடு குளிக்க சென்ற இளைஞர் - எதிர்பாராத நேரத்தில் நேர்ந்த சோகம்
அரியலூர், மாவட்டம் கள்ளக்குடி தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சபரிவாசன். இவஎ கீழப்பழவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், சபரிவாசன் தனது நண்பர்களுடன் உடையார்பாளையம் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கியதால், தீயபணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சபரிவாசனை சடலமாக மீட்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story