ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்.. மர்ம நபரால் துடிதுடித்து கிடந்த பயங்கரம் - சென்னையில் பரபரப்பு
செங்கல்பட்டு மக்கான் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, பெருங்களத்தூரில் துணிமணிகள் மற்றும் பழங்களை வாங்கிக் கொண்டு, அங்குள்ள ரயில் நிலையத்தின் ஒன்றாம் நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியால், தமிழ்ச்செல்வியின் வலதுகையில் கிழித்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பலத்த காயம் அடைந்து வலியால் துடித்த தமிழ்ச்செல்வி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story