விதவிதமான உணவுகள், ரகரகமான அம்சங்கள் ; தமிழக அரசின் சொகுசு கப்பல் சுற்றுலா - என்னென்ன ஸ்பெஷல்?

விதவிதமான உணவுகள், ரகரகமான அம்சங்கள் ; தமிழக அரசின் சொகுசு கப்பல் சுற்றுலா - என்னென்ன ஸ்பெஷல்?
x


சென்னையில் இருந்து இயக்க உள்ள சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம், பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும் என சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்தார். சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடலுக்கு சென்று வரும் சுற்றுலா திட்டத்தை, ஜூன் 4ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். இது குறித்து பேசிய சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடலுக்கு சென்று வருவது தனி உலகம் எனவும் இதில் பயணிப்பது புது அனுபவமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். பல்வேறு வகையான உணவுகள், கலாசார, இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு, உடற் பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட அம்சங்கள் கப்பலில் இடம் பெறும் என, குறிப்பிட்ட அவர், சுற்றுலா திட்டத்துக்காக சென்னை துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் பயணிகள் முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்