மது பாட்டிலில் தொடங்கிய சண்டை... குடிக்கும் போதே கழுத்தில் வெட்டு - மாதக்கணக்கில் காத்திருந்து கருவறுத்த பகை

x

சிவகாசி, மேற்கு பகுதியின் நேருஜி நகரை சேர்ந்தவர் ஈஸ்வர பாண்டியன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோகுல்குமார் என்பவருக்கும் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும்போது தகராறு ஏற்பட்டு நீடித்து வந்திருக்கிறது. இதில், இருவரது தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டதாகவும், இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்த ஈஸ்வர பாண்டியனை, கோகுல்குமார் தரப்பினர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலே ஈஸ்வர பாண்டியன் உயிரிழந்த நிலையில், அவரது நண்பரான சுந்தர் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், கோகுல்ராஜ் உட்பட ஐந்து இளைஞரை கைது செய்த நிலையில், ஐவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்