தண்ணீர் வாளியில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழப்பு - வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தனியார் பேருந்து, லாரி மோதிய விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சேரன்மகாதேவி ரவுண்டான அருகே பேருந்தின் பக்கவாட்டு பகுதியில், லாரி மோதி விபத்து நேர்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த முதியவர்கள் உள்ளிட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில், தண்ணீர் வாளியில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜமங்கலம் ஜெகநாதர் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவிக்குமாரின் 10 மாத குழந்தை தீக்ஷயா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழிப்பறையில் தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் மூழ்கி குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.