இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22 -11-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - 26ம்தேதி உருவாக வாய்ப்பு"
வரும் 26 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு....
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்....
"அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்"
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்....
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் தகவல்....
சென்னையில் மழைநீர் தேக்கம்- மாநகராட்சி மேயர் ஆய்வு
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு..........
மழைநீர் தொடர்பாக 24 மணி நேரமும் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பேட்டி....
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
கடலூர் மாவட்டம் சிதம்பரம், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை....
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மழைநீர் தேங்கியதால் படகு சேவை நிறுத்தம்......
ஆர்ப்பரிக்கும் அருவி - 4வது நாளாக குளிக்க தடை
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளப்பெருக்கு....
சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாக தடை....