டெங்குவுக்கு 4 வயது சிறுவன் பலி... சென்னையில் அதிர்ச்சி..! பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு...

x

சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்ததாகக்கூறி, சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெற்றோர் மற்றும் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியரின் 4 வயது மகன் ரக்சனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றிரவு சிறுவன் உயிரிழந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு என கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்