3 மூலைகளில் நடந்த மெகா மோசடி - நடுரோட்டில் கதறும் பெண்கள்.. பரிதாபம்..

x
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனம் மீது பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
  • திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாய்க்கால் மேடு பகுதியில் செயல்பட்டு வந்த அந்த நிறுவனம், 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கடன் தருவதாக பண மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
  • இதே போல் கோவை மாவட்டம் சூலூரில், சுய உதவி குழுவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்...
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் முதல் தவணை, முன்பணம் என 500க்கும் மேற்பட்டோரிடம், பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில், அந்த நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
  • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் செயல்பட்டு வந்த அந்த தனியார் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் 36 லட்சம் ரூபாய் வரை சுருட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டு தரக் கோரி வேதனையுடன் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்