"கேலிக்கூத்து என மட்டரக அரசியல்" எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்

பேரறிவாளன் விடுதலையை கேலிக்கூத்து என்று கூறி மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
x
பேரறிவாளன் விடுதலையை கேலிக்கூத்து என்று கூறி மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேரறிவாளனின் தாயார் நடத்திய சட்டப் போராட்டமும், அதற்கு துணை நின்ற திமுக அரசுமே, அவரது விடுதலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பாக, கடந்த 2018ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் போட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி என்ன செய்து கொண்டிருந்தார் என்றும், உச்சநீதிமன்றத்தில் வாத பிரதிவாதங்கள் நடந்தபோது எங்கே இருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரவை முடிவு எடுத்து 7 ஆண்டு அதிமுக ஆட்சியில் கிடைக்காத விடுதலை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் சாத்தியமாகி - சாதனையாகவும் மாறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதனை கேலிக்கூத்து என விமர்சிப்பது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் துளியும் பொருத்தமில்லாதது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்