முதலமைச்சரின் டெல்லி பயண விவரம்

4 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பயண விவரங்கள் குறித்து தற்போது காணலாம்...
x
நாளை பிற்பகல் நாடாளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பிதழை முதல்வர் வழங்க உள்ளார்.இந்த சந்திப்பின் போது நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழகத்திற்கு தேவையான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இழப்பீடு நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்து வைக்க உள்ளார். பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 3.30க்கு சந்திக்கும் முதல்வர்.பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை 4.30 மணிக்கு சந்திக்கிறார்.இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் முதலமைச்சர, பின்னர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை மாலை 4.30 மணியளவில் சந்திக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்