மாயமான ராகு, கேது, மயில் சிலைகளை தெப்பக்குளத்தில் தேடும் போலீசார்

மயிலாப்பூர் கோயிலின் தொன்மை வாய்ந்த மயில் சிலை மற்றும் ராகு, கேது சிலைகளை கோயிலின் தெப்பக்குளத்தில் இறங்கி தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
x
மயிலாப்பூர் கோயிலின் தொன்மை வாய்ந்த மயில் சிலை மற்றும் ராகு, கேது சிலைகளை கோயிலின் தெப்பக்குளத்தில் இறங்கி தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் அங்குள்ள புன்னைவன நாதர் சன்னிதியில் இருந்த தொன்மை வாய்ந்த மயில் சிலைக்கு பதிலாக வேறொரு மயில் சிலை மாற்றி வைக்கப்பட்டதாகவும், உண்மையான சிலை திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல ராகு, கேது சிலைகளும் திருடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆகம விதிப்படி கோயில்களில் தொன்மை வாய்ந்த சிலைகளை தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கும் முறை இருப்பதால், திருடுபோன சிலைகள் மயிலாப்பூர் தெப்பக் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பேரில் தீயணைப்பு துறை உதவியோடு அவர்கள் தெப்பக்குளத்தில் இறங்கி சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்