கள்ளக்காதலை தட்டிக்கேட்ட தந்தை - தாயுடன் சேர்ந்த எரித்து கொன்ற மகள்

ராமநாதபுரம் அருகே, கள்ளக்காதலை தட்டிக்கேட்ட தந்தையை, தாய் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் எரித்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
ராமநாதபுரம் அருகே காவனூரை சேர்ந்த ரவி என்பவர், கடந்த 8ஆம் தேதி உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார். இந்நிலையில், போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கணவனை பிரிந்து தாய் வாழ்ந்து வந்த ரவியின் மகள் பவித்ராவுக்கும், வலசை பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்த‌து. மேலும், கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால், தாய் பாக்கியம் மற்றும் கள்ளக்காதலன் முருகானந்த‌துடன் சேர்ந்து, ரவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு பவித்ரா தப்பியோடியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை தட்டி கேட்ட தந்தையை, தாய் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்