துணை ஆணையர் அலுவலகம் அருகே கிடந்த உடல்கள் - ஆவடியில் பயங்கரம்
ஆவடி ஓசிஎஃப் மைதானத்தில் இருவர் கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
. ஆவடி ஓசிஎஃப் மைதானத்தில் மீன் வியாபாரியான அசாருதீன் என்பவரும், ஆட்டோ ஓட்டுனரான சுந்தர் என்பவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓசிஎஃப் மைதானத்தில்தான் கொலை நடந்ததா அல்லது வேறு இடத்தில் கொலை செய்துவிட்டு உடல்கள் மைதானத்தில் வீசப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வரும் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெகன், யாசின் ஆகிய இருவரை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். ஆவடி காவல் உதவி ஆணையர் அலுவலகம் அருகே கொல்லப்பட்டவர்களின் உடல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story