குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - மிதமான வேகத்தில் இயக்கப்படும் மலை ரயில்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் காட்டு யானைகள் நடமாடுவதால், மலை ரயில் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் காட்டு யானைகள் நடமாடுவதால், மலை ரயில் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒருவார காலமாக ஹில் குரோவ், ரன்னிமேடு ரயில் நிலையத்திற்கு இடையே குட்டியுடன் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன.
உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றன. இதனால் மலை ரயில் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வரும்
நிலையில், யானைகளை கண்காணிக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story