" அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர அரங்கம்" - முதல்வர் ஸ்டாலின் உறுதி
" அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர அரங்கம்"
ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்திற்கான திட்டங்கள் தொடக்க விழாவில் காணொலியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், சங்க கால மதுரையை, நவீன மதுரையை உருவாக்கியது திமுக ஆட்சி என்று பெருமிதம் தெரிவித்தார். காலத்தால் அழிக்க முடியாத கருவூலமாக கலைஞர் நூலகம் அமைய உள்ளதாக கூறிய அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலையை நீட்டிக்கவும், அகலப்படுத்தவும் 100 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். அதேபோல், மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை, புறநகருக்கு மாற்றப்பட்டு அந்த இடம் மக்கள் பயன்பாட்டிற்காக பசுமை பகுதியாக மேம்படுத்தப்படும் என்றார்.
Next Story