திடீரென தீப்பிடித்து எரிந்த மாவட்ட எஸ்.பி. கார் - தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்
விழுப்புரம் அருகே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருவபர் ஸ்ரீநாதா. எஸ்.பி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது காரில், காவலர் தியாகராஜன் என்பவர் , உதவியாளர் ஒருவரை அழைத்து கொண்டு சென்றார். விழுப்புரம் முத்தம் பாளையம் என்கிற இடத்தில் சென்ற போது, காரிலிருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story