பிற மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிப்பு - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் பலர், பிற மாவட்ட மீனவர்களை நடுக்கடலில் சிறைப்பிடிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிற மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிப்பு - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
x
பிற மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக ஆந்திராவுக்குச் செல்கையில், அவர்களது விசைப்படகுகளால் பழவேற்காடு மீனவர்கள் கடலில் விரிக்கும் வலைகள் சேதமடைவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்களை சிறைபிடிக்க பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது இரு தரப்பினரிடையே மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பழ வேற்காடு மீனவர்கள் தங்களை சூழ்ந்த உடன், பிற மாவட்ட மீனவர்கள் எல்லையை விட்டுச் சென்றனர். இந்நிலையில், பிற மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழவேற்காடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்