ரூ.5 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் - 2 பேர் கைது, தப்பி ஓடிய 3 பேருக்கு வலை
சென்னையில் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் மூசா. ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான இவர், சந்தனமரம், செம்மரம் விற்பனை செய்து வந்ததோடு, பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசிஆரில் உள்ள தனது மகன் பஷீர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த குமார் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல்,
மூசாவின் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளது.
பின்னர் அவரின் காரிலேயே மூசாவை கடத்திச் சென்ற அந்த கும்பல் போரூருக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு வீட்டில் கைவிலங்கு போட்டு அடைத்து வைத்துள்ளது. பின்னர் மூசாவின் மகன் பஷீருக்கு போன் செய்த அந்த கும்பல், 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது.
இதனால் பதறிப் போன பஷீர், நீலாங்கரை உதவி ஆணையரிடம் புகார்மனு அளித்தார். பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நூதன வலை விரிக்கப்பட்டது. அப்போது கொள்ளை கும்பலிடம் பேசிய பஷீர், தன்னிடம் 5 கோடி ரூபாய் பணம் இல்லை என்று கூறவே, பேரமானது 3 கோடியாக குறைந்து ஒரு கட்டத்தில் 50 லட்ச ரூபாய் வரை வந்துள்ளது.
பணத்தை எடுத்துக் கொண்டு தாம்பரம் வர வேண்டும், அம்பத்தூர் வரவேண்டும் என கூறி பஷீரை அலைக்கழித்துள்ளது அந்த கும்பல். பஷிருடன் போலீசாரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் திடீரென மூசாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் பஷிருக்கு போன் செய்த கும்பல், எழும்பூர் அருகே உள்ள மால் பகுதிக்கு பணத்துடன் வருமாறு கூறவே, பஷிர் போலீசாருடன் அங்கு சென்று காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கடத்தல் கும்பல், பஷிரிடம் இருந்து பணத்தை பெற முயன்ற போது அங்கு மறைந்திருந்த போலீசார் கடத்தல் கும்பலை விரட்டிச் சென்றனர். அப்போது காரில் இருந்த மூசாவையும் பத்திரமாக மீட்டனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது...

Next Story