தீபாவளி - சொந்தஊர் செல்ல பேருந்து முன்பதிவு - "www.tnstc.in வழியாக முன்பதிவு செய்யலாம்"

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, அரசு பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
x
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம் செய்வர். கடைசி நேர நெரிசல், பதற்றம் உள்ளிட்டவைகளை தவிர்க்கும் விதமாக, பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்கள் வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. அரசு போக்குவரத்து கழகத்தின் WWW.TNSTC.IN என்ற இணையதளம் வழியாகவும், டிஎன்எஸ்டிசியின் செயலி உள்ளிட்டவைகள் மூலம் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு முன்பின் நாட்களில் சுமார் 5 நாட்கள் அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிறப்புப் பேருந்துகள் இயக்கம், பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அமைச்சர் வெளியிடுவார் என்றும்  துறைசார் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்