போலி ஆவணம் மூலம் ரூ.12 கோடி மோசடி - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்
செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது, 12 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜெயின்லால் சவுத்ரி என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், திருப்போரூர் அடுத்த தையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் கூறி ஆறு கோடி ரூபாய் பெற்ற நிலையில், தொழில் தொடங்க பணம் தேவைப்படுவதாகக் கூறி மேலும் ஆறு கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகள் கடந்த நிலையில், ராமகிருஷ்ணன் அளித்த ஆவணங்களை சரி பார்த்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது. இதனிடையே, பணத்தை திருப்பிக் கேட்ட ஜெயின்லால் சவுத்ரியை கொலை செய்து விடுவதாக, ராமகிருஷ்ணன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ஜெயின்லால் சவுத்ரி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராமகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார்.
Next Story