"பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்" - பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என்பதற்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுகின்றனர். இதனால் பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு தொழிலாளர்கள் ஆளாகுவதாக விளக்கம் அளித்த அமைச்சர், அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து வேலைகளுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் எனக் கருதப் படுவதாக கூறினார். மாநில தொழிலாளர் ஆலோசனை கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட இருக்கை வசதி கருத்து உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story