"கோவில் நிலம் : பட்டா வழங்க நடவடிக்கை" - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
கோவில் நிலம் : பட்டா வழங்க நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
x
சட்டப்பேரவையில் நடந்த இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது, கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குமாறு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு  பட்டா வழங்க வழி செய்யும் மசோதாவிற்கு கடந்த 2019-ஆம் நீதிமன்றம் தடைவிதித்ததாகவும்,இந்த, தடை ஆணையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், ஜமீன்தாரர்கள் தானமாக வழங்கிய கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல் உள்ளதாகவும்,  
இத்தகைய சிக்கல் அனைத்தும் சீர்செய்யப்பட்டவுடன், கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்