சிறு,குறு,நடுத்தர தொழிற்துறை அறிவிப்புகள் - அமைச்சர் தா மோ அன்பரசன் வெளியிட்டார்
சட்டப்பேரவையில் நடைபெற்ற குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தா மோ அன்பரசன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
சட்டப்பேரவையில் நடைபெற்ற குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தா மோ அன்பரசன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் படி, மணப்பாறை, காவேரி ராஜ புரம், கோட்டூர் மற்றும் சக்கிமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 394 ஏக்கர் பரப்பில் சுமார் 218 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பில், 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 7000 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான கல்வித் தகுதியை பன்னிரண்டாம் வகுப்பு என தளர்த்தியும், தனி நபர் முதலீடு 50 லட்சத்தில் இருந்து 75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் 50.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடியில் 19 ஏக்கரில் 23 கோடி திட்ட மதிப்பில் ஆயிரம் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் சிற்ப கலைஞர் தொழில் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொழில் முனைவோருக்கு (Term Loan) கால கடன் மற்றும் நடைமுறை மூலதன கடன் ( Working Capital Loan ) தாய்க்கோ வங்கியில் இருந்து எளிதில் கிடைத்திடும் வகையில் தாய்கோ வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்கோ வங்கி கிளைகளில் வாடிக்கையாளர் வசதிக்காக 4 கிளைகளை நவீனமயமாக்கம் 82 லட்சம் செலவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு புத்தாக்க ஆதார மானிய ( டான்சீட் ) திட்டத்தின் மூலம் 50 புத்தொழில்களுக்கு மானியமாக தலா 10 லட்சம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் த.மோ அன்பரசன் அறிவித்துள்ளார். மாவட்ட தொழில் மைய அலுவலகங்களுக்கு பழுதடைந்த பழைய நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிலாக வருவாய் 60 லட்சம் செலவில் 8 புதிய ஜீப்புகள் கொள்முதல் செய்யப்படும்
Next Story