2022 முதல் புதிய பேருந்து நிலையம் - 44 ஏக்கரில் பேருந்து நிலையம் உருவாக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வசதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்
x
தமிழகத்தின் தலைநகரை அனைத்து மாவட்டங்களுடன் இணைக்கும் பேருந்து நிலையம் கோயம்பேடு...சென்னை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2022 மார்ச் மாதம் முதல் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

பேருந்து நிலையத்தை பொறுத்தவரை மொத்த நிலப்பரப்பு 44 ஏக்கர். இதில் 4 தளங்கள் உருவாக்கப்படுகின்றன.இரண்டு அடித்தளங்கள் கொண்ட கட்டடத்தில், கார்கள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்களும்,தரைதளத்தில் கடைகள், பயணிகளுக்கான வசதிகளும் அமைய உள்ளன.முதல்தளத்தில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கான ஓய்விடங்கள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டுமான பரப்பளவு 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் எனவும், இதில் 216 வெளியூர் பேருந்துகளை நிறுத்தலாம் என கூறப்படுகிறது.இதைத்தவிர மாநகர பேருந்துகளுக்காக 11 நடைமேடைகள் உருவாக்கப்படுகின்றன.வாகன நிறுத்துமிடத்தில் 329 கார்கள் மற்றும் 2,764 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும் என்றும், 4 உணவகங்கள் உட்பட மொத்தம் 50 கடைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்