தாய்கோ வங்கியில், ரூ.7 கோடி மோசடி - அமைச்சர் அன்பரசன்

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில், 7 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.
x
மானிய கோரிக்கையில் பேசிய திருத்தணி தொகுதி திமுக எம்.எல்.ஏ சந்திரன், தாய்கோ வங்கிகளில் நகைக் கடன் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறினார். இதற்கு பதிலளித்த,  ஊரக தொழில் கூட்டுறவு அமைச்சர் தா. மோ. அன்பரசன், 7 கோடி ரூபாய் மதிப்பில், நகை கடன் மோசடி நடந்துள்ளது என்றார். தாய்கோ வங்கி மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சார்பாக நாமக்கல், சேலம் பகுதியின் 5 வங்கிகளில், 7 கோடி ரூபாய் மதிப்பில், நகை கடன் மோசடி நடந்துள்ளதாக கூறினார். போலியான முறையில் நகைக்கடன் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 45 தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகளான தாய்கோவில், ஆய்வு நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்