"ஓராண்டில் குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படும்" - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
ஒரே ஆண்டில், தட்டுப்பாடின்றி மக்களுக்கு குடிநீர் வழங்க விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை சுற்றியுள்ள 500 ஏரிகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணி நடைபெறுவதாக குறிப்பிட்டார். அந்த ஏரிகளில் மழை நீர் சேமித்து, குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும், தட்டுப்பாடின்றி மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் முறையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சென்னை, நகராட்சி உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
Next Story