கருணாநிதி நினைவிடம் குறித்த முதல்வரின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் அறிவிப்புக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் அறிவிப்புக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து பேசிய அவர், கருணாநிதிக்கு நினைவிடம் என்கிற அறிவிப்பை அறிவித்த முதல்வருக்கு நன்றி கூறினார்.அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் நாங்கள் வரவேற்க கடமைபட்டிருப்பதாக ஓபிஎஸ் குறிப்பிட்டார். முதலமைச்சர் உரையில் இருந்த அனைத்து சிறப்புகளும் கருணாநிதி நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நாமெல்லாம் அண்ணாவின் குடையின் கீழ் அரசியல் பாடம் கற்றவர்கள் என்றும் கருணாநிதியின் சமுதாய சீர்திருத்த கருத்துகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் பராசக்தி பட வசனம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார். தனது தந்தை தீவிர கருணாநிதி பக்தர் என்றும் அவருடைய பெட்டியில் எப்போதும் பராசக்தி மனோகரா பட வசன புத்தகம் இருக்கும் என்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நினைவுகூர்ந்தார்.
Next Story